Sunday, February 18, 2007

இப்படியும் சொன்னார்கள்



1977ல் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் திரு.கருணாநிதி அவர்கள் எம்.ஜி.ஆர். என்ற நடிகர் பற்றி இப்படி சொன்னார் - இரண்டு வரி வசனம் மனப்பாடம் செய்து பேச தெரியாது (ஆம் இரண்டு வரி தான் இரண்டு பக்கம் அல்ல) திரு.கருணாநிதி அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் வரை நடிகர் கட்சி என்றே குறிப்பிட்டு வந்தார்.





தமிழ்வாணன் எழுதிய பதில்கள்

1) எம்.ஜி.ஆரிடம் முதல் அமைச்சர் பொறுப்பை விட்டால்?

சர்க்கஸ் கம்பெனியை ஒரு மனித முதலாளி நடந்த்தாமல் சிங்கத்தின் பொறுப்பில் நடக்கவிட்டு, கூண்டைத் திறந்து வைத்திருந்தால் என்னென்ன விபரிதங்கள் நிகழுமோ அவ்வளவும் நிகழும்.


2) எம்.ஜி.ஆர். இந்த வயதில் கூடக் கதாநாயகனாக நிலைத்து நிற்பதிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னை பற்றிய எந்த உண்மையும் மக்களுக்கு தெரியாமல் வாழ்கிறவன், அவனை பற்றிய உண்மைகள் தெரியும் வரை அவன் செல்வாக்கோடு இருப்பான் என்று தத்துவ மேதை மான்ஸ்பீல்டு சொன்னது உண்மை என்று தெரிகிறது.

  • மேலும் அவர் சொன்ன சில முத்தான ரகசியங்கள்

    எம்.ஜி.ஆருக்கு கார் ஒட்ட தெரியாது. இங்க்லீஸ் பேச தெரியாது.

    எம்.ஜி.ஆர் ஒரு சர்வாதிகாரி அவர் இன்னொரு இடிஅமீன்.

    எம்.ஜி.ஆர் தனக்கு கைரேகை பார்க்க தெரியும் என்று ஏமாற்றி வருகிறார்.

    அரசியலில் காமெடி செய்பவர் எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர். ஜப்பானில் படப்பிடிப்புக்காக போயிருந்த போது தன்னை பற்றி ஜப்பானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சுய விளம்பரம் பிட் நோட்டீஸ் அடித்தார் இந்த துண்டு விளம்பரங்களை ஆங்கில மொழியிலும் ஜப்பான் மொழியிலும் அச்சிட்டுக் கொண்டார் எந்த ஏந்த நாட்டுக்கு படப்பிடிப்புக்காக பேகிறாரோ அங்கெல்லாம் இந்த பிட் நோட்டீஸ்களை விட்டார் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு நடிகரும் வாத்தியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா பப்ளிஸிட்டி.

(1970ல் எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்க ஜப்பான் சென்றார் அங்கே அவருக்கும் தமிழ்வாணன் அவர்களுக்கும் வாய் தகராறு நடந்தாக சொல்லி இப்படி எழுதியிருந்தார் - படிப்பதற்கு முன்பாக வடிவேல் பேசும் வசனமாக நினைத்து படியுங்கள்)

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஜப்பானில் சொற்போர் நடந்தது. எம்.ஜி.ஆர். சினந்து கொண்டே பேசினார் நான் சிரித்து கொண்டே பேசினேன். இதற்கு 40 தமிழர்கள் சாட்சி. இந்த போர் பற்றி நானாக எதுவும் எழுதப்போவதில்லை. எம்.ஜி.ஆர். எழுதினால் தான் நான் எழுதுவேன் காரணம் இந்த போர் எனக்கும் எம்.ஜி.ஆருக்கு மட்டும் உள்ள போர் அல்ல. ஒரு பெருங் கூட்டத்திற்க்கும் இன்னோரு பெருங் கூட்டத்திற்க்கும் நடக்க இருக்கிற போர்.


அடுத்த பதிவு அ.இ.அ.தி.மு.க.வின் 5ம் ஆண்டின் தொடக்க நிகழ்ச்சிகளின் தமிழ்வாணன் கூற்றுகள்

No comments: