Sunday, February 11, 2007

பொய்யான தீர்க்கதரிசனங்கள்
எம்.ஜி.ஆர் ஒரு நடிகராக இருந்து முதல் அமைச்சராக இருந்த வரை உங்களுக்கு தெரியும் - ஆனால் 1972ல் இருந்து 1977 வரை அவரை பற்றி Master of all Subjects என்று பெயர் பெற்ற தமிழ்வாணன் அவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி எழுதிய கவர் ஸ்டோரி இங்கு தருகிறேன். இப் பதிவு படித்து
நீங்கள் சிரித்தாலும், தமிழ்வாணன் அவர்களை தவறாக நினைத்தாலும் அதற்கு நான் பொறுப்பல்ல. 2 பக்கம் வருவதை சுருக்கி தந்திருக்கிறேன் -


தயாரா - படியுங்கள்.

கல்கண்டு இதழ் - மே மாதம் 1977 - தலையங்கம் (எம்.ஜி.ஆரின் எதிர்காலம்)தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சியை அடியோடு ஒழித்துக்கட்டுவது என்று சபதம் எடுத்த இராஜாஜி 1967 ஆம் ஆண்டு அந்த சபதத்தை முழூமையாக நிறைவேற்றிக் காட்டினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அன்று கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி இன்று வரை தலை தூக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியை எப்படியும் வேரறுத்துக் காட்டுவேன் என்று சபதம் எடுத்த எம்.ஜி.ஆர். இந்த சபதத்தை 1976 ஜனவரி கடைசியில் நிறைவேற்றிக் காட்டினார். தி.மு.க. மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதனுடைய சவப் பெட்டிக்கு ஆணி அடித்தற்ப்போல் சமீபத்திலே நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தல்.

இராஜாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே சாணக்கியனைப் போல் தங்கள் சபதத்தை செவ்வையாக நிறைவேற்றினார்கள். என்றாலும், பின் விளைவுகளைப் பார்க்கும் போது இராஜாஜி சபதத்தை விட எம்.ஜி.ஆர். சபதம் சிறப்பானது என்பது என் கருதது. இதை யவராலும் மறுக்க முடியாது. ஏன் என்றால் தனது சபதம் நிறைவேறியதை இராஜாஜியே பிற்காலத்தில் மனம் வருந்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி வருந்தவில்லை............ இராஜாஜி தனது தவறுக்காக 1971 தேர்தலுக்காக பெருந்தலைவர் காமராஜ்வுடன் சேர்ந்த்து பகீரதப் பிரயத்தனம் செய்ததார்கள் ஆனால் இருவராலும் தி.மு.கவை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை. அவர்களின் முயற்ச்சிக்கு தமிழ் மக்கள் படுதோல்வி பரிசாக அளித்தார்கள். இராஜாஜி ஏமாந்தார், காமராஜரும் ஏமாந்தார். இராஜாஜி, காமராஜரும் தோல்வி அடைந்த அந்த முயற்ச்சியில் எம்.ஜி.ஆர். முழுமையாக வெற்றி பேற்றார். அந்த அளவுக்கு தமிழ் மக்களிடையே எம்.ஜி.ஆருடைய செல்வாக்கு மேலோங்கி நிற்கிறது என்பதை இந்திரா காந்தி முதல் எல்லாருமே உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் தான் இந்தப் பார்லிமெண்டுத் தேர்தல் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. வோடு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ள உடன் பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரின் இந்தச் செல்வாக்கிலே ஒரு சிறு குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாட்டை நினைவு படுத்தும் வகையில் அவருடைய இரட்டை இலைத் தேர்த்தல் சின்னமே அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. ......................... இராஜாஜி நவீன சாணக்கியன் என்றால் தமிழ்நாட்டிலே உள்ள அறிவாளிகள் அத்தனை பேரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரையும் சாணக்கியன் என்றால் நம் வாசகர்கள் பலர் சிரிக்காமல் இருக்கமட்டார்கள். இது எனக்கும் தெரியும், அவர்கள் ஏன் சிரிக்க வேண்டும், எம்.ஜி.ஆர். ஒரு சினிமா நடிகர் அதனால் எல்லாரும் சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். எவ்வளவுதான் அரசியல் செல்வாக்கோடு விளங்கினாலும், அதை வெறும் சினிமா கவர்ச்சி என்று ஒதுக்கி தள்ளிவிடுகிறார்கள்.

இத்தகையே பேச்சுக்கு எம்.ஜி.ஆர் இனியும் இடம் கொடுக்கலாமா? அரசியலும், சினிமாவும் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைகளாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்றிலிருந்து விலகி, மற்றொன்றில் முழு மூச்சாக ஈடுபடுவது எம்.ஜி.ஆரின் எதிர்காலதிற்கு நல்லது.

திரைபடங்களில் எம்.ஜி.ஆர் ஒரு முடி சூடா மன்னராக வாழ்ந்து விட்டார்......... மேலும் அவருக்கு வயதாகி விட்டது. படம் மார்க்கெட் டல்லாகிக் கொண்டே போகிறது. 10 வருடங்களுக்கு முன்பே எம்.ஜி.ஆர். ஒரு வயதான நடிகர் என்று பெயர் வாங்கி விட்டார்.... முன்பு போல் அதிகமான பணம் சம்பாதிக்க முடியாது....... அரசியலில் எம்.ஜி.ஆருக்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன... அதற்கு முட்டுக் கட்டை அண்ணாயிசம். இது வரையில் அதை ஒரு மந்திரம் போல் உருப்போட்டுக் கொண்டிருந்தது சரிதாம், ஆனால் இனிமேல் இது எடுபடாது.

எதிர்காலத்தில் இந்தியாவிலே இரண்டு கட்சிதான் ஒன்று காங்கிரஸ் இரண்டு ஜானதா. .......... இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்.க்கு இரண்டு கட்சியிலும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. ஆகையால் எம்.ஜி.ஆர். தன்னுடைய கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் அல்லது ஜானதாவோடு இணைந்து விடுவது அவருக்கு மட்டுமல்ல நம் தமிழ் நாட்டுக்கே பேரிதும் நல்லது....

(அவர் குறிப்பிட்ட 2வது கட்சி இப்போது இல்லை, ஆனாலும் எம்.ஜி.ஆர். இல்லாமலும் கட்சி இருக்கிறது)

உபரியாக சில வாசகரின் கேள்விக்களுக்கு இப்படி பதில் தந்திருந்தார் - (1977)
1) இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?
எம்.ஜி.ஆர். கட்சியை பார்த்தால் 60 சீட் கூட கிடைக்காது.

2) எம்.ஜி.ஆர். இந்த முறை வெற்றி பெறுவாரா?
அவரை எதிர்த்து நடிகை லதா நின்றால், எம்.ஜி.ஆர் தோற்று விடுவார், அவருக்கு டிபாசிட் கூட கிடைக்காது.

No comments: