Sunday, March 9, 2008

இதயக்கனி

இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.

1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.

தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ - லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.

இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.